Dakshkarதக்ஷ்கர்

Dakshkar · Salem, Tamil Naduதக்ஷ்கர் · சேலம், தமிழ்நாடு

Terms of serviceசேவை விதிமுறைகள்

Effective 10 October 202610 அக்டோபர் 2026 முதல் நடைமுறையில்

These terms apply when you book a service through Dakshkar, by app, WhatsApp or phone. By booking, you agree to them.தக்ஷ்கர் வழியாகச் செயலி, வாட்ஸ்அப் அல்லது போனில் சேவையைப் பதிவு செய்யும்போது இந்த விதிமுறைகள் பொருந்தும். பதிவு செய்வதன் மூலம் நீங்கள் இவற்றை ஏற்கிறீர்கள்.

1. What Dakshkar does1. தக்ஷ்கர் என்ன செய்கிறது

Dakshkar connects homes in and around Salem with independent, verified service professionals ("pros" or "partners"). The pro does the work. Dakshkar takes the booking, checks the pro's identity, collects payment, issues the invoice and handles support and complaints.தக்ஷ்கர் சேலம் மற்றும் சுற்றுவட்டார வீடுகளைச் சுதந்திரமான, சரிபார்க்கப்பட்ட சேவை நிபுணர்களுடன் ("நிபுணர்கள்" அல்லது "கூட்டாளர்கள்") இணைக்கிறது. வேலையை நிபுணர் செய்வார். பதிவு, நிபுணரின் அடையாளச் சரிபார்ப்பு, பணம் பெறுதல், பில், உதவி, புகார்கள் ஆகியவற்றைத் தக்ஷ்கர் கவனிக்கும்.

2. Who can book2. யார் பதிவு செய்யலாம்

You must be 18 or older, and the service address must be within our service area: about 15 km from Salem New Bus Stand. Keep your PIN private; bookings made from your account are treated as yours.நீங்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்; சேவை முகவரி எங்கள் சேவைப் பகுதிக்குள் (சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ) இருக்க வேண்டும். உங்கள் PIN-ஐ ரகசியமாக வைத்திருங்கள்; உங்கள் கணக்கிலிருந்து செய்யப்படும் பதிவுகள் உங்களுடையவையாகக் கருதப்படும்.

3. Prices and the bill3. விலைகளும் பில்லும்

4. Paying4. பணம் செலுத்துதல்

You can pay online when you book, or pay after the work by UPI or cash. Paying after the work is available for bills up to ₹3,000; larger bills are paid online. You get a GST invoice in the app for every completed booking.பதிவின்போது ஆன்லைனில் செலுத்தலாம், அல்லது வேலை முடிந்ததும் UPI அல்லது ரொக்கமாகச் செலுத்தலாம். வேலைக்குப் பின் செலுத்துவது ₹3,000 வரையிலான பில்களுக்கு மட்டும்; அதற்கு மேல் ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு முடிந்த பதிவுக்கும் செயலியில் GST பில் கிடைக்கும்.

5. Cancelling and refunds5. ரத்து செய்தலும் பணத்தைத் திரும்பப் பெறுதலும்

6. Warranty on repairs6. பழுதுகளுக்கு உத்தரவாதம்

Electrician, plumber, carpenter, AC and appliance, and pest control services come with a 30-day warranty. If the same problem comes back within 30 days of the work, tell us and we send a pro to fix it at no labour charge.எலக்ட்ரீஷியன், பிளம்பர், தச்சர், AC மற்றும் வீட்டு உபகரணங்கள், பூச்சிக் கட்டுப்பாடு சேவைகளுக்கு 30 நாள் உத்தரவாதம் உண்டு. வேலை முடிந்து 30 நாட்களுக்குள் அதே பிரச்சினை மீண்டும் வந்தால், எங்களுக்குத் தெரிவியுங்கள்; கூலி இல்லாமல் சரிசெய்ய நிபுணரை அனுப்புவோம்.

The warranty does not cover a different problem, damage from misuse, or faults in new parts (those have the maker's own warranty). Cleaning, laundry, tutor, driver, painting and moving services do not have a warranty, but you can still complain about the work (section 8).வேறு பிரச்சினை, தவறான பயன்பாட்டால் ஏற்படும் சேதம், புதிய பாகங்களின் குறைபாடுகள் (அவற்றுக்குத் தயாரிப்பாளரின் உத்தரவாதம் உண்டு) இதில் அடங்காது. சுத்தம், சலவை, டியூட்டர், டிரைவர், பெயிண்டிங், வீடு மாற்றம் சேவைகளுக்கு உத்தரவாதம் இல்லை; ஆனால் வேலை பற்றிப் புகார் அளிக்கலாம் (பிரிவு 8).

7. At your home7. உங்கள் வீட்டில்

Please make sure an adult is at home during the work, and that the pro has safe access to the place of work, water and power where needed. Treat pros with respect. A pro may refuse or stop work that is unsafe, and Dakshkar may close accounts that abuse or threaten pros or staff.வேலையின்போது வீட்டில் ஒரு பெரியவர் இருப்பதையும், வேலை செய்யும் இடம், தேவைப்பட்டால் தண்ணீர், மின்சாரம் நிபுணருக்குப் பாதுகாப்பாகக் கிடைப்பதையும் உறுதி செய்யுங்கள். நிபுணர்களை மரியாதையுடன் நடத்துங்கள். பாதுகாப்பற்ற வேலையை நிபுணர் மறுக்கலாம் அல்லது நிறுத்தலாம்; நிபுணர்களையோ ஊழியர்களையோ திட்டும், மிரட்டும் கணக்குகளைத் தக்ஷ்கர் மூடலாம்.

8. Complaints and damage8. புகார்களும் சேதமும்

If you are unhappy with the work, or something was damaged, tell us within 48 hours by WhatsApp or email, with photos if you can. We look into every complaint and reply within 7 days. Where Dakshkar or the pro is at fault, we will redo the work, refund, or pay for the damage. Except where the law says otherwise, Dakshkar's responsibility for a booking is limited to the amount you paid for that booking.வேலை திருப்தி இல்லையென்றால், அல்லது ஏதாவது சேதமானால், 48 மணி நேரத்துக்குள் வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலில், முடிந்தால் புகைப்படங்களுடன் தெரிவியுங்கள். ஒவ்வொரு புகாரையும் ஆராய்ந்து 7 நாட்களுக்குள் பதில் அளிப்போம். தக்ஷ்கர் அல்லது நிபுணரின் தவறு என்றால், வேலையை மீண்டும் செய்வோம், பணம் திருப்பித் தருவோம், அல்லது சேதத்துக்கு ஈடு தருவோம். சட்டம் வேறுவிதமாகச் சொல்லும் இடங்களைத் தவிர, ஒரு பதிவுக்குத் தக்ஷ்கரின் பொறுப்பு அந்தப் பதிவுக்கு நீங்கள் செலுத்திய தொகை வரை மட்டுமே.

9. Partners9. கூட்டாளர்கள்

Pros on Dakshkar are independent professionals, not Dakshkar employees. Partners agree to separate partner terms when they join through the Dakshkar Partner app.தக்ஷ்கரில் உள்ள நிபுணர்கள் சுதந்திரமான தொழில் வல்லுநர்கள்; தக்ஷ்கர் ஊழியர்கள் அல்ல. தக்ஷ்கர் பார்ட்னர் செயலி வழியாகச் சேரும்போது கூட்டாளர்கள் தனி விதிமுறைகளை ஏற்கிறார்கள்.

10. Changes and law10. மாற்றங்களும் சட்டமும்

We may update these terms; the date above shows the latest version, and we tell you in the app before a change applies. These terms follow the laws of India, and disputes go to the courts in Salem, Tamil Nadu.இந்த விதிமுறைகளை நாங்கள் புதுப்பிக்கலாம்; மேலே உள்ள தேதி சமீபத்திய பதிப்பைக் காட்டும், மாற்றம் நடைமுறைக்கு வரும் முன் செயலியில் தெரிவிப்போம். இந்த விதிமுறைகள் இந்தியச் சட்டங்களைப் பின்பற்றுகின்றன; தகராறுகள் தமிழ்நாடு, சேலம் நீதிமன்றங்களுக்கு உட்பட்டவை.

11. Contact11. தொடர்புக்கு

Email service@dakshkar.com or WhatsApp +91 97512 46409.மின்னஞ்சல் service@dakshkar.com அல்லது வாட்ஸ்அப் +91 97512 46409.

If the English and Tamil versions differ, the English version applies.ஆங்கிலம், தமிழ் பதிப்புகளில் வேறுபாடு இருந்தால், ஆங்கிலப் பதிப்பே பொருந்தும்.